திருச்சிராப்பள்ளி
 
 
மலைக்கோட்டை
 திருச்சியில் மிகவும் பிரசித்திபெற்ற இடம் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில்.
இம்மலைக்கோவில் தரைமட்டத்திலிருந்து 83 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு
செல்ல மலையில் குடைந்த 437 படிகளை ஏற வேண்டும்.உச்சிக்கு செல்லும் பாதி வழியி-
லேயே தாயுமானவர் சன்னிதானம் (சிவன் கோவில்) உள்ளது.இதனுடன் இணைந்தது
நுற்றுக்கால் மண்டபம் மற்றும் விமானம்.  மலை உச்சியிலிருந்து திருச்சி மாநகர்முழுவ-
தையும், ஸ்ரீரங்கம்,காவேரி ஆறு, கொள்ளிடம் மற்றும் திருவானைக்கோவில் போன்ற 
இடங்களையும் காணலாம்.
 
     
 
ஸ்ரீரங்கம்
  தென்னகத்தின் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீரங்கம் காவேரி ஆறு மற்றும் முக்கொம்பு 
சூழ அமைந்துள்ளது. தெற்கே ஒடும்நதி காவேரி எனவும் வடக்கே பாயும்நதி கொள்ளிடம்
என்றும் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீரங்கத்தில்
ஸ்ரீரெங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார்.சுமார் 22 கோபுரங்களை கொண்ட உயர்ந்த ஸ்ரீரங்கம்
கோவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 21 கோபுரங்கள் 14வது முதல் 17வது
நூற்றாண்டு வரை கட்டப்பட்டது.72மீ உயரம் கொண்ட 13 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் 
1987-ல்கட்டப்பட்டது.
 
   
 
  ஜம்புகேஸ்வரர்
ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. சிவனை வழிப்பட்ட யானையின் பெயரால் இச்சிவ ன் கோவில் பெயர் பெற்றுள்ளது
(திருவானைக்கோவில்).ஜம்பு மரத்தின் அடியில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கமானது
நீர் முழ்கியுள்ளது.இது நீர் அவதாரத்தில் கடவுள் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
 
   
 
உத்தமர் கோவில்
இத்திருக்கோவில் திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிரம்மா,சிவா,விஷ்ணு
ஆகிய மூன்று தெய்வங்களும் ஓரே இடத்தில் காணப்படுவதுஇக்கோவிலின் சிறப்பாகும். 108 முக்கிய சிவதலங்களுள் இதுவும் ஓன்றாகும். கல்வி கடவுளான சரஸ்வதிக்கென தனி சன்னிதானம் உண்டு. ஆழ்வார்கள் 12 பேர்களில் ஓருவரான திருமங்கையாழ்வார் இக்கோவில் பற்றி பாடியுள்ளார்.
 
   
 
சமயபுரம்
மாரியம்மமன் கோவில் கொண்டுள்ள தலம். தேசிய நெடுஞ்சாலை 45-ல் திருச்சியிலிருந்து
20 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
 
   
 
   லூடுர்ஸ்  ஆலயம்
திருச்சி நகரின் நடுவில் உள்ள இவ்வாலயத்தை சுற்றி கடைகள் அதிகம் உண்டு. இக்கோவில் மிகச்சிறந்த கலைநயத்துடன் கூடிய கட்டுமானத்துடன் அமைந்துள்ளதால்
கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களுள் ஓன்றாகும்.
 
     
 
  ஹசரத் நாதர்வளி
ஓராயிரம் பழமைவாய்ந்த இந்த தர்கா திருச்சியின் மைய பகுதியில் அமைந்துள்ளது. பளிங்கினால் ஆன முலஸ்தானம் தர்காவிற்கு மேலும் அழகூட்டி காண்போரை கவரும்
வண்ணம் அமைந்துள்ளது.
 
     
 
  முக்கொம்பு
முக்கொம்பு- காவிரி நதியிலிருந்து கொள்ளிடம் பிரியுமிடத்தில் திருச்சியிலிருந்து 18 கி.மீ
தொலைவில் உள்ள உல்லாச பொழுது போக்குமிடம்.சிறுவர்கள்,பெரியவர்கள் என அனை-
வருக்குமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.

 
     
 
  கல்லணை
கல்லணை- திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கல்லணை.
வரலாற்று சிறப்புமிக்க கல்லணை நீர் தேக்கம் கரிகால சோழமன்னனால் கட்டப்பட்டது.
இதுவும் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஒரு சிறந்த பொழுது போக்குமிடம்.
 
     
 
  வெக்காளியம்மன்
வெக்காளியம்மன் கோவில்- உறையூரில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன்
திருக்கோவில் திருச்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.எல்லா நாட்களிலும்
பக்தர்கள் கூட்டம் அதிகம் உண்டு.
 
     
 
  வயலூர்
வயலூர்- திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வயலூர்,குமாரவயலூர்
என்றும் அறியப்படும். இத்தலம் முருக்க கடவுள் குடிகொண்டுள்ள இடமாகும்.
 
     
 
  புளியஞ்சோலை
புலியஞ்சோலை- திருச்சியிலிருந்து 72 கி.மீ தொலைவில் கொல்லிமலைத் தொடர்
அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய நீர் வீழ்ச்சி கொண்ட சுற்றுலா இடமாகும்.
 
 
 
     
Copyright Štrichytravels 2007. All Rights Reserved.