தஞ்சாவூர்
 
சோழமன்னர்களின் ஆட்சிகாலத்தில் தலைநகரமாக விளங்கிய தஞ்சாவூர் திருச்சியிலிருந்து கிழக்கே 55 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நதியின் நீர் பாசனத்தால் செழிப்பாக விளங்கும் தஞ்சை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் ராஜ்ஜியத்தில் மிகவும் புகழ்பெற்ற சக்கரவர்த்தி ராஜசோழ காலத்தில் கட்டட நிர்மான கலைகளின் பெருமை தஞ்சையில் கோவில்களாகவும் நினைவுச்சின்னங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கலாச்சார முன்னேற்றத்திற்கு பெயர் பெற்று விளங்கும் இம்மாவட்டம் கைத்தொழில் ஈடுப்பட்டு இருப்பவர்களை கவர்ந்து கைவினை வர்த்தக பொருள்களை உருவாக்குகிறது.  கலாச்சாரம், கைத்தொழில்தந்திரம் முதலியவற்றை கற்று கொடுப்பதில் பரம்பரை உரிமை கொண்டுள்ளது. இங்கு மென்மையான பட்டு கம்பளம், ஆபரணங்கள், மெல்லிய தங்க தகடுகளில் வரைந்த தஞ்சை ஒவியங்கள், இசைக்கருவிகள், வெண்கலத்தாலான சிற்ப்பங்கள் போன்றவற்றிற்காக புகழ்பெற்று விளங்கிறது.
 
 
ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில்
சோழர் காலத்தின் கட்டட நிர்மான கலையின் பெருமைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் ராஜ ராஜ சோழ சக்கரவர்த்தியால் 10-ம் நூற்றாண்டில் கட்டடப்பட்டுள்ளது. சிவ தலங்களில் ஒன்றான இக்கோவிலின் கோபுரத்தில் காணப்படும் சிற்ப்பங்கள் விஷ்ணு கடவுளுக்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தமத சிற்பங்கள் கோவிலினுள் காணப்படும். இத்தலத்தில் உள்ள மிகப்பெரிய நந்தி சிலை இந்தியாவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 80 டன் கருங்கல்லால் உருவாக்கப்பட்ட கோபுரத்தின் சிற்ப்பங்கள் திராவிட கைத்தொழி்லுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.
 
       
 
அரண்மனை
கோவிலுக்கு அருகே அமைந்துள்ள அரண்மனை கி.பி 1550-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. பெரிய தாழ்வாரங்கள், மண்டபங்கள், கூடங்கள், மிக உயரமான ஆயுத சாலைகள் போன்றவற்றை கொண்டு அமைந்த இந்த பெரிய அரண்மனையின் கொத்த வேளைகள் நாயக்கர்களாலும் மேலும் மேற்கே ஒரு பகுதி மராட்டியர்களாலும் கட்டபட்டடுள்ளது. இங்கு காணப்படும் தர்பார் மண்டபம் இக்காலகட்டத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேலும் கலைகூடம், சரஸ்வதி மஹால் நூலகம், ராயல் அருகாட்சியகம் மற்றும் இசைக்கூடம் உள்ளது.
 
       
 
கலைக்கூடம்
இக்கலைகூடத்தில் அற்புதமான வெண்கல கடவுள் சிலைகள், விலை மதிப்பற்ற கற்சிற்ப்பங்கள் சோழர் காலத்தின் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் உள்ளது. கலை ஆர்வமிக்கவர்களின் கண்களுக்கு விருந்தாக இக்கலைகூடம் அமைந்துள்ளது.
 
       
 
ராயல் அருங்காட்சியகம்&சரபோஜி நினைவிடம்
அரண்மனையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ராயல் அருங்காட்சியகம் மராட்டியர்களுக்கு சொந்தமான அரிய தொல்பொருட்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கையொழுத்து பிரதிகள், கலைப்பொருட்கள் ஆயுதங்கள், யாணை தந்தங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள், கண்ணாடி, மரம், துணி வகைகள், தோல் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மராட்டிய வரலாற்றை விளக்கும் வண்ணம் இங்கு காணப்படும் இசைக்கருவிகள், உடைகள், ஒவியங்கள், கற்கள், உலோக சிற்ப்பங்கள், மரத்தாலான பொருட்கள் உள்ளது.
 
       
 
தொல்காப்பியர் சதுக்கம்
8-வது உலக தமிழ்மாநாட்டின் போது தொல்காப்பியர் சதுக்கம் கட்டப்பட்டுள்ளது. உயர்ந்து காணப்படும் இந்த சதுக்கத்தின் மேலிருந்து பார்த்தால் தஞ்சை மாநகரை முழுவதையும் காணலாம்.
 
       
 
சங்கீதா இசை அரங்கம்
செவிப்புலனுக்கு ஏற்றவாறு திறம்பட கட்டப்பட்ட சங்கீதா மஹால் தஞ்சை அரண்மனையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய கால கட்டட தொழில் நிபுணர்களின் பொறியியல் திறமைக்கு ஓர் எடுத்துகாட்டாக விளங்கிறது.
 
       
 
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
தஞ்சையிலிருந்து 6 கி.மீ தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. தஞ்சை மாவட்டதின் மிக பிரத்திமானது இக்கோவில்.
 
 
சரஸ்வதி மஹால் நூலகம்:
உலக சரித்திரத்தின் மத்திய காலத்தை சார்ந்த நூலகங்களில் ஒன்றாக விளங்குகிறது தஞ்சை மகாராஜ சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம். பழமைவாய்ந்த பாணிக்கும் காலத்துக்குறிய பணம் பெருமதியான பொருட்கள் முதலியவற்றை விளக்கும் இந்நூலகம் நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்களின் ராஜ்ஜியத்தின் சிறப்பை கூறுகிறது. பண்டைகால கலை, கலாச்சாரம, இலக்கியம் போன்றவற்றிற்கு உதாரணமாக இங்கு மதிப்புள்ள அறிய கையொழுத்து பிரதிகள், புத்தகங்கள், வரைப்படங்கள், ஒவியங்கள் உள்ளன. பிரட்டானிக்கா என்சைக்கலோ பீடியா நடத்திய நூலக கணக்கெடுப்பில் சரஸ்வதி மஹால் நூலகம் இந்தியாவின் மிக பிரத்திமான நூலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டில் நாயக்கரால் அரண்மனை நூலகம் என பெயர் சூடப்பட்டு பின்னர் மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் இந்திய அரசால் பராமரிக்கப்படும் இந்த நூலகம் 1918-ம் ஆண்டில் பொது நூலமாக மாற்றப்பட்டது.
 
 
சர்ஜா மடை:
சுற்றுலா பயணிகள் இங்கிருந்து தஞ்சை மாநகரை கண்டு களிக்கலாம். மரசிற்ப்பங்களை கொண்ட சர்ஜா மடை அரண்மனை வளாகத்தில் உள்ளது.
 
 
ராஜராஜன் மணி மண்டபம்: இந்த மண்டபம் 8-ம் உலக தமிழ் மாநாட்டின் போது கட்டப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை கொண்டு சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
 
ராஜராஜன் அருங்காட்சியகம்:
இந்த அருங்காட்சியகம் ராஜ ராஜன் மணிமண்டபத்தின் அடிதளத்தில் சுற்றுலா பயணிகள் பயணடைய செயல்ப்படுகிறது. தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
 
 
நாகேஸ்வரன் கோவில்:
சோழர் காலத்தின் சிற்பங்களை சிறப்புற விளக்கும் இக்கோவில் கி.பி 1005-ம் ஆண்டு தஞ்சையிக்கு மிக அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பிரார்தனை, அழகியியல், புராண கதை போன்றவற்றிற்கு பிரசித்தமாக விளங்குகிறது. வெளிநாட்டவர்கள் பலரும் இக்கோவிலில் உள்ள சிற்ப்பங்கள், கல்வொட்டு முதலியவற்றை ஆர்வமுடன் அறிந்து கொள்கிறார்கள்.
 
 
அயிராவதீஸ்வரர் கோவில் :
தஞ்சையிலிருந்து 34 கி.மீ தொலைவில் தாராசுரத்தில் அயிராவதீஸ்வரர் கோவில் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவில் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக யுனஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
 
 
ஒரத்தநாடு :
ஒரத்தநாட்டில் மராட்டிய சத்திரம் சரபோஜி இரண்டாம் மன்னரின் மனைவி ராணி முத்தமாள் காலத்திற்கு பிறகு அவர் பெயரால் அமைக்கப்பட்டது. இரத வடிவில் காணப்படும் இச்சத்திரத்தில் அதிகமான அளவில் சமயம் சார்ந்த மரச்சிற்ப்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட்ள்ளது .
 
 
மனோரா :
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வரலாற்று புகழ்மிக்க உயரமான நினைவுச்சின்னமாக மனோரா விளங்கிறது. தஞ்சையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இச்சிறிய கோட்டை பலகோண வடிவில் 8 மாடி உயரம் கொண்டது. நெப்போலியனை வெற்றிகண்ட வெள்ளையர்களை சிறப்பிக்க சரபோஜி இரண்டாம் மன்னரால் 1815-ம் ஆண்டு மணோரா கட்டப்பட்டுள்ளது.
 
 
பட்டுக்கோட்டை :
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்து தொழில்களை கொண்டது பட்டுக்கோட்டை. பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, கல்ப் போன்ற நாடுகளிலிருந்து முதலீடுகள் இந்நகரத்தின் வர்த்தக வளர்ச்சி உதவுகிறது. மேலும் சமீப காலத்தில் லண்டலிருந்து முதலீடு வரத் தொடங்கியுள்ளது. மடக்கூர், அறந்தாங்கி, துவரங்குறிச்சி, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, பாபநாடு போன்ற முக்கிய நகரங்கள் பட்டுக்கோட்டையை சுற்றி உள்ளது.
 
 
குவார்ட்ஸ் தேவாலயம்:
அரண்மனை தோட்டத்தில் உள்ள இந்த தேவாலயம் கி.பி 1779-ம் ஆண்டு சரபோஜி மன்னரரால் கட்டப்பட்டுள்ளது. சரபோஜி மன்னர் சமய பிரசாரகர் Rev.C.V குவார்ட்ஸ் மேல் கொண்ட அன்புக்கு அடையாளமாக இந்த தேவாலயத்தை உருவாக்கியுள்ளார். கடந்த காலத்தில் வெள்ளையரின் இராணுவம் வழிப்பட்டதாக கூறப்படுகிறது.
 
     
 
 
     
Copyright Štrichytravels 2007. All Rights Reserved.