மதுரை
 
  மதுரை மாநகர் ஒரு முக்கியமான புண்ணியதலமாகும். வரலாற்று புகழ்மிக்க மதுரையில் வைகை நதி பாய்கிறது. சிவனின் 64 திருவிளையாடல்கள் அரங்கேறியது இந்த மாநகரில்தான். சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல முக்கிய இடங்களை கொண்ட மதுரையில் மிகவும் பழமையானதாகவும் முக்கியமானதாகவும் விளங்குகிறது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு யாத்திரிகர்களை கவரும் இக்கோவில் இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் இந்து சமயத்தின் பெருமைகளையும் அந்நகரின் கலாச்சாரத்தையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 2500 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாநகரம் தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இடம் பெற்றுள்ளது. கோவில்களிலும் அரண்மணைகளிலும் உள்ள கலை சிற்பங்கள் ஒவியங்கள் மதுரை மாநகரின் வரலாற்றை விளக்கும் வண்ணம் உள்ளது.  
     
 
மீனாட்சியம்மன் கோவில்
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் முக்கிய புண்ணியதலமாகும். இக்கோவில் 12 பெரிய கோபுரங்களை கொண்டுள்ளது அதில் நான்கு பெரிய கோபுரங்கள் கோவிலின் நுழைவாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியின் இடது புறமாக பொற்றாமறை குளம் உள்ளது. இக்கோவிலில் லிங்க வடிவில் சுந்தரேஸ்வரர் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் ஒரே கருங்கல் பாறையை குடைந்து ஆயிரம் தூண்களை கொண்ட மண்டபம்(ஆயிரங்கால்மண்டபம்)16 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் யாழின் வடிவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தூண்களில் மூலம் பல விதமான சங்கீத குறிப்புகளை அறியலாம். இக்கோவிக்குள் கலை களஞ்சிய கண்காட்சியகம் உள்ளது.
 
   
 
கூடல் அழகர் கோவில்

கூடல் அழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மதுரை மாநகரின் மேற்கில் 2 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் விஷ்ணு மூன்று நிலைகளில் காட்சியளிக்கிறார். அதில் பிரசித்தமானது அமர்ந்த நிலையில் உள்ள கூடல் அழகர் மேலும் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர் ,முழு உருவில் உள்ள ஸ்ரீ சூர்ய நாராயண பெருமாள். கூடல் அழகர் திருவிழா சித்திரை மாதம் பெளணர்மி அன்று நடைபெறும். அத்திருநாளில் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் உலாவருவது இதன் சிறப்பாகும்.
 
   
 
மாரியம்மன் கோவில்
1636 -ம் ஆண்டு மாரியம்மன் தெப்பக்குளம் 1000 அடி நீளம், 950 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது . மதுரை மாநகரத்தின் கிழக்கு எல்லையில் அமைந்த இந்த பெரிய குளத்தில் நடுவில் உள்ள மண்டபத்தில் விநாயகர் ஆலயம் நான்கு கோபுரம் சூழ அமைந்துள்ளது. இதில் காட்சியளிக்கும் விநாயகரின் சிலை திருமலைநாயக்கர் மஹால் கட்டப்பட்டபோது பூமியில் கண்டெடுக்கப்பட்டது. தெப்பத் தேர்திருவிழா திருமலைநாயக்கரின் பிறந்த நாளான தைப்பூசத்தன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அத்திருவிழாக்காக வைகை ஆற்றின் நீர் பாதாளம் வழியாக வந்தடைகிறது.
 
   
 
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். மதுரை மாநகரின் தெற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவிலின் சுவர்களில் இந்து சமய கடவுள்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது.  பாண்டிய மன்னர்களால் 8-ம் நூற்றாண்டில் திருப்பரங்குன்ற மலையை குடைந்து பின்னர் நாயக்கர்களால் ஆலயம் வடிவமைக்கப்பட்டது.
 
   
 
அழகர் கோவில்
மதுரையின் வடகிழக்கில் 18 கி.மீ தொலைவில் அழகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்தியாவின் மிக பழமையான கோவில்களில் ஒன்றாகும். அழகர் மலையில் அமைந்திருக்கும் இத்திருதலத்தின் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுணன் மற்றும் யுதிஸ்திரா இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷ்ணுவை வந்து வணங்கியதாக புராணக் காவியமான மஹாபாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இராமானுஜரின் பக்தாரான குருட்டுயாழ்வார் இவ்வழகரை வழிப்பட்டபின் கண் பார்வை கிடைக்கப் பெற்றார். இங்குள்ள 2000-ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான சுதர்சன சக்கரத்தை கண்டாள் புண்ணியம்.
 
     
 
திருமலைநாயக்கர் மஹால்
மதுரை மாநகரின் நடுவில் திருமலைநாயக்கர் அரண்மணை உள்ளது. கலைநயத்துடன் அமைக்கப்பட்ட தூண்கள் காண்போர்களை வியப்பூட்டூம் வகையில் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு தினமும் மஹால் காலை 9 மணி மதல் 1 மணி வரை மற்றும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.மாலை நேரங்களில் திருமலைநாய்க்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் சிலப்பதிகார கதைகளை நாடகங்களாக நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள வண்ண ஒளி கொண்ட மேடையில் அரங்கேற்றுவது இதன் சிற்ப்பாகும்.
 
     
 
காந்தி அருங்காட்சியகம்
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இராணி மங்கம்மாலுக்கு செந்தமான தமுக்கம் அரண்மணையில் காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 2 மணி முதல் 5:30 மணி வரை காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் மற்றும் யோகா கற்றுத்தரப்படுகிறது.
 
     
 
பழமுதிர் சோலை
பழமுதிர் சோலை மதுரை மாநகரின் அருகே அமைந்துள்ள புண்ணிய தலங்களில் ஒன்று. இங்கு பிரசித்தமான முருக கடவுளை ஆறுமுகா, கார்த்திகேயா, கந்தா மற்றும் குமரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். புலவர் நக்கீரர் தனது பாடல்களில் பழமுதிர் சோலை அறுபடை வீடுகளில் ஆறாவது இடத்தை இருப்பதாகவும் மேலும் செந்தில் ஆண்டவரை புகழ்ந்து பாடியுள்ளார் . இந்த திருத்தலம் அழகர் மலையில் கள்ளழகர் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
 
     
 
கொடைக்கானல்
கொடைக்கானல் மதுரையிலிருந்து 121 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவின் மிகவும் சிறப்பான மலை பிரதேசங்களில் ஓன்று. தென்னிந்தியாவில் அமைந்திருக்கும் இந்த மலை பிரதேசத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2130 மீட்டர் ஆகும். சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மதுரைக்கு அருகே அமைந்துள்ளது.
 
     
 
வைகை அணைக்கட்டு
மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வைகை அணைக்கட்டு 70 கி.மீ தொலைவில் உள்ளது.
 
     
 
குற்றாலம்
எழில்மிகு குற்றாலம் மதுரையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த ஆரோக்கியமான ஊடாடுமிடமாகும். பலதரப்பட்ட அதிக சுற்றுலா பயணிகளை கவரும் ஒன்பது சிறந்த நீர் வீழ்ச்சிகளை கொண்டது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை உணவு சாலை மற்றும் படகு வீடு நிருவி உள்ளது.
 
     
 
பழநி
180 மீட்டர் உயரத்தில் நிற்கும் பழநி மலையில் அமைந்திருக்கும் ஸ்ரீதண்டாயுதபானி கோவில் மதுரையிலிருந்து 118 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருத்தலத்தின் திருவிழா பங்குனி மாதம் உத்திரத்தன்றும் ஆடி மாதம் கார்த்திகையன்றும் மிக சிறப்பாக நடைபெறும். இவ்விரு நாட்களின் போது ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ தண்டாயுதபானியை வழிபட திரள்வார்கள்.
 
     
 
சுருளி நீர்வீழ்ச்சி
கண்கவர் இடத்தில் அமைந்திருக்கும் சுருளி நீர் வீழ்ச்சி மதுரையிலிருந்து 123 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.
 
     
 
இராமகிருஷ்ணா மடம்
உலக பிரசித்தப்பெற்ற இராமகிருஷ்ணா மடத்தின் கிளை மதுரையில் உள்ளது. ஓவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று யோகா கற்றுத்தரப்படுகிறது.
 
     
 
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்று விளங்கும் வடபார்த்தசாயி கோவில் நாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோவிலின் வரலாறு பாண்டியர்கள் காலத்திற்கு முன்னரே உள்ளது, என்னவென்றால் தனது பக்தையான ஆண்டாளை கிருஷ்ணர் மணமுடித்தது . தென்னகத்திலே மிகவும் சிறப்பு மிக்கதாக இத்திருத்தலத்தின் கோபுரம் விளங்குகிறது. மேலும் தேர் திருவிழாவின் போது கோவிலில் உள்ள கலை சிற்பங்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேர் உலா வருவது பக்தர்களை கவரும் வண்ணம் உள்ளது.
 
     
 
 

வண்டியூர் கண்மாய் ஆலயம் :
பெரியார் பஸ் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் ஒரு சுற்றுலா தளமாக வண்டியூர் கண்மாய் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி மற்றும் குழந்தைகளுக்கான இரயில் அமைக்கப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையால் பரமாரிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப உணவுச் சாலைகளும் உண்டு.
பெரியார் தேசிய பூங்கா :
மதுரையிலிருந்து 155 கி.மீ தொலைவில் பெரியார் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த தேசிய பூங்கா இந்திய யாணைகளை பாதுகாக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த பூங்கா அமைந்துள்ள வனத்தின் சரிவு பகுதியில் ஏரி உள்ளது. ஐப்பசி மாதம் முதல் ஆனி மாதம் வரை இந்த ஏரியில் இயற்கையோடு வாழும் யாணைகளும் மற்றும் ஒரு வகை மான்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கலாம்.
மேகமலை :
மனமகிழ்ச்சியூட்டுகிற இயற்கை வளம் நிறைந்த மேகமலை மதுரையிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. தேயிலை தோட்டங்களை கொண்ட இந்த மலை அழகான சுற்றுலா தலமாக விளங்கிறது. இயற்கை வளத்தை அனுபவிக்கும் கற்றுலா பயணிகள் இந்த மலையில் அருகே உள்ள வன பகுதியில் ஒரு சில விலங்குகளையும் காணலாம்.
கும்பக்கரை நீர் வீழ்ச்சி :
ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீர் வீழ்ச்சி மதுரையிலிருந்து 105 கி.மீ தொலைவில் உள்ளது. நீர் வீழ்ச்சி, பிரதான அழகை கொண்ட மலை மற்றும் சூழ்ந்துள்ள வனப்பகுதி சுற்றுலா பயணிகள் அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க சிறந்த இடமாகும். மலை ஏறுதல் பயிற்சி முகாமிற்கு ஏற்ற இடமாகும்.
விரகனூர் அணைக்கட்டு :
விரகனூர் அணைக்கட்டு மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. உல்லாச பயணத்திற்கு சிறந்த இடமாகும்.
திருமவூர் :
திருமால் தன் துணைவியார் செம்பகவள்ளி தாயாருடன் எழுந்தருளியுள்ள கோவில் திருமவூரில் உள்ளது. ஒத்தகடையிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் மற்றும் மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள திருமவூரில் விளங்கும் விஷ்ணுவை காளமேக பெருமாள் என்றும் அழைப்பார்கள்.
திருவாதவூர் :
மதுரையிலிருந்து 25 கி.மீ மற்றும் ஒத்தகடையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திருவாதவூர் சிவ தலங்களில் ஒன்று இங்கு சிவன் பார்வதியுடன் காட்சியளிக்கிறார் மேலும் புகழ்பெற்ற புலவர் மாணிக்கவாசகரின் பிறந்த ஊராகும்.
தேவாலயங்கள் :
வெப் மெமேரியல், ரோஸ்ஷரி, சென்ட் மேரிஸ், வெஸ்ட் கேட், YMCA , மணி நகரம் மற்றும் லூர்தன் தேவாலயம் மதுரையில் உள்ளது.
பள்ளிவாசல் :
கிழக்கு வாசல், கிழக்கு மாசி வீதி செயின்ட், வைகை பாலம் அருகே சங்கம் மற்றும் கோரிபாளையம் பள்ளிவாசல் மதுரையில் உள்ளது.
 
     
 
     
 
 
     
Copyright Štrichytravels 2007. All Rights Reserved.