அம்பாள்
 
பாரத நாட்டில் சக்தி வணக்கம் மிகப்பழமையானது. சக்தி பீடங்கள் பாரத நாடு முழுவதும் உள்ளன. சிருங்கேரி மடத்தில் சாரதா தேவியார் எழுந்தருளியிருக்கிறார். காஞ்சி காமகோடி பீடத்தை ஆதிசங்கரர் தாபித்தார். காமாட்சியம்மை ஆதியில் பலி வாங்கும் காளியாக இருந்தாள். அவளைச் சாந்த சொரூபிணி ஆக்கினார் சங்கரர்.
கல்கத்தா காளி வழிபாட்டிற்குப் பெயர் போன மாவட்டம். காளி கட்டத்தில் உள்ள காளி மகா சக்தி வாய்ந்தவளாக வங்காளிகளால் வணங்கப்படுகிறாள். அஸ்ஸாமில் காம ரூபம் மிகச் சிறந்த சக்தி பீடம். மதுரையில் ஆதியில் ஒர் சக்தி பீடம் இருந்தது.

கொற்றவை யென்ற துர்க்கா தேவி பாலை நிலத்தின் கடவுள் என்று கூறுகிறது தொலிகாப்பியம். எனவே சக்தி வணக்கம் அக்காலத்தில் விரவியிருந்த ஒன்று. மாமல்லப்புரத்தில் கொடிக்கால் மண்டபம் என்ற குகைக் கோயிலில் பல்லவர் கால்த்துக் காளி கோயில் ஒன்றியிருக்கிறது. தென்னாற்காடு மாவட்டத்தில் சிங்கவரத்திலுள்ள மகேந்திரவர்மனுடைய குகைக் கோயிலில் புடைச் சிற்பமாக ஒரு காளி இருக்கிறாள். திருவொற்றியூரில் வட்டப்பாறை நாச்சியார் என்ற காளி கோயில் இருக்கிறது. இவ்வாறு துர்க்கை வழிபாடு மிக்கிருந்த காலத்தில் சாக்தர்கள் என்ற தேவிஉ உபாசகர்கள் தமது அடிச் சிரத்தை ஒரே படியாக விரைந்தரிந்து தேவி த்திருக்கரங்களில் அதனைச் சமர்ப்பித்துப் பலியூட்டுவது வழக்கமாயிருந்தது.

இந்தத் துர்கை மகாவிஷ்ணுவின் யோக மாயை என்பர். தமிழ் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயில்களில்
வணங்கப்படுபவர் இந்த துர்கையே. ' ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்து ' என்று இவளைக் கொண்டாடுவர். விஷ்ணு மூர்த்தியின் சங்கல்பத்தின்படியே யோக மாயை ஆயர்பாடியில் யசோதை வயிற்றில் பெண்ணாய்ப் பிறந்தாள்.
 
   
   
  திருத்தலங்கள்
 
   » சமயபுரம்    » சாமுண்டேஸ்வரி
   » கன்னியாகுமரி       » காமாட்சி அம்மன்
   
   
 
     
 
 
     
Copyright Štrichytravels 2007. All Rights Reserved.